மாநில அளவிலான கபடி போட்டியில் பரிசு வென்ற கே.பி.ஆர் கல்லூரி

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் உடற்கல்வித் துறை மாணவர்கள் மாநில அளவிலான கபடி போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றுள்ளனர்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு கே.டி.எஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் கரூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. மொத்தம் 52 அணிகள் கலந்து கொண்ட போட்டியில், கே.பி.ஆர் கலை கல்லூரி உடற்கல்வித்துறை மூலம் பயிற்சி அளிக்கப்பட்ட மாணவர்கள் பதினோரு பேர் ஓரணியாகக்  கலந்துகொண்டு, இரண்டாம் பரிசினைப் பெற்றுள்ளனர். வெற்றி பெற்றமைக்காக நினைவு கோப்பையும் ரூபாய் 10 ஆயிரம் பரிசுத் தொகையும் பெற்றுள்ளனர். உடற்கல்வி இயக்குநர் முனியசாமி வெற்றி பெற்ற வீரர்களையும் கே.பி.ஆர் குழுமத்தின் தலைவர் டாக்டர் கே.பி.ராமசாமி பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மேலும், கல்லூரியின் முதல்வர் பாலுசாமி புலமுதன்மையர்களும், பேராசிரியர்களும், வெற்றி பெற்ற வீரர்களைப் பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.