‘மதுரை விருந்து’ கோவையில் துவக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மேட்டுப்பாளையம் சாலையில் சைவ மற்றும் அசைவ உணவுகளுக்கென ஏ.கே.கிச்சன் குழுமத்தின் மதுரை விருந்து மல்டி குஷைன் ரெஸ்டாரெண்ட் துவங்கப்பட்டது.

கோவையில் செட்டிநாடு, கொங்கு, சைனீஸ், மலபார் என பல்வேறு வகையான உணவு வகைகளுக்கென தனித்தனி உணவகங்கள் இருந்தாலும், தமிழகத்தில் சங்க கால இலக்கியத்தில் இடம்பெற்ற முக்கிய நகரமான மதுரை தொடர்பான உணவு வகைகளுக்கென தனி மதுரை விருந்து எனும் புதிய உணவகம் கோவை ஆர்.எஸ்.புரம் மேட்டுப்பாளையம் சாலையில் துவங்கப்பட்டுள்ளது.

உணவகத்தின் உரிமையாளர் அருண்குமார் பேசுகையில், மதுரையின் எண்ணெய் சுக்கா, தலைக்கறி, குடல், நண்டு என மதுரை பாணியில் சுவை மாறாமல் பரிமாற உள்ளதாகவும். இது மட்டுமில்லாமல் சைனீஸ் உட்பட அனைத்து வகைகளும் இங்கு வழங்க உள்ளதாக தெரிவித்தார். குறிப்பாக மதிய உணவில் அசைவ பிரியர்களுக்கென 500 ரூபாயக்கு தலைக்கறி, குடல், சுக்கா, மீன் வகைகள் என அறு சுவையில் முழு சாப்பாடு வழங்க உள்ளதாக கூறிய அவர், அரபு நாடுகளில் உள்ளதை போல மஜிலிஸ் எனும் கீழே அமர்ந்து சாப்பிடும் முறை, குழைந்தைகளுடன் வருபவர்களுக்கு பிரத்யேக அறை, பார்ட்டி ஹால் என பெரிய ஸ்டார் ஓட்டல்களில் இல்லாத வசதிகள் கூட எங்களது உணவகத்தில் படிப்படியாக செய்ய போவதாக தெரிவித்தார்.