குழந்தைகளுக்கான தேடல் ஒரே இடத்தில்…

ஒவ்வொரு தம்பதியரும் திருமணத்திற்கு பிறகு வேண்டும் ஒரே வரம் குழந்தை பாக்கியம்தான். அவ்வாறு, தவமாய் தவமிருந்து பெற்றெடுக்கும் குழந்தையை உள்ளங்கையில் வைத்து தாங்க வேண்டும் அல்லவா! பிறந்தநாள் முதல் குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சியிலும், தேவையான பாதுகாப்பான பொருட்களை அவர்களுக்கு வழங்குவதில் நிறையவே கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. அதற்கான தேடலும் நீண்டுகொண்டே செல்கிறது. இனி அதுபோன்ற தேடல் நமக்கு அவசியம் இல்லை!

ஆம்! குழந்தைகளுக்கான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் பான் பேபிஸ் (Born Babies) இப்பொழுது, மிக பிரம்மாண்டமாக தனது 32வது கிளையை கோவை நியூ சித்தாபுதூர் சாலையில் அமைச்சர் பொங்களூர் பழனிசாமி தொடங்கி வைத்தார். இங்கு குழந்தைகளின் தேவைகளுக்கு ஏற்ப அனைத்து வகையான பொருட்களும் கிடைக்கின்றன. குழந்தைகளுக்கு அவசியமான நாப்கின், போர்த்தும் துண்டுகள், ஈரமான துடைப்பான்கள், போர்வைகள், கம்பளிகள் கிடைக்கின்றன.

மேலும், வித விதமாக குழந்தைகளின் கண்ணைக் கவரும் துணி வகைகள், பீடிங் பாட்டல், ஸ்பூன், சிப்பர், மில்க் கண்டைனர், குழந்தைகள் குளிப்பதற்கு தேவையான ஆயில் மசாஜ் ஷீட், ஹேர் ஆயில், சோப், ஷாம்பூ போன்றவைகள் விற்கப்படுகின்றன. தாய்மார்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில், Mother needs பொருட்களும் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரே இடத்தில், அம்மா, குழந்தை என இருவருக்குமேயான அனைத்து பொருட்களும் தரமாகவும், விலை குறைவாகவும் கிடைக்கும் என்பது அரிதிலும் அரிது. இத்தகு சிறப்புமிக்க பொருட்கள் அனைத்து வாடிக்கையாளர்களும் பெற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தோடு செயல்பட்டு, நமது கோவையில் பல கிளைகளை உருவாக்கி வருகிறது பான் பேபிஸ் (Born Babies). வாங்குவதற்கும், உடுத்துவதற்கும், உபயோகிப்பதற்கும் தரமான பொருட்களை வழங்கி வரும் பான் பேபிஸ் (Born Babies) ஷோரூமிற்கு ஒரு முறையாவது சென்று பார்த்தால்தானே புரியும்!!!

http://www.bornbabiesonline.com/