ரத்தினம் கல்லூரியில் 72வது குடியரசு தினவிழா

குடியரசு தினம் மற்றும் நாட்டின் தேசப்பற்றை உணர்த்தும் விதமாக கோவை ரத்தினம் கல்லூரியில்  ஓ மற்றும் பி உட்படைப்பிரிவு , 2 டி.என் பீரங்கி பேட்டரி என்.சி.சி.யுடன்  இணைந்து 72வது குடியரசு தினவிழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் மாணவர்களுக்கு தேசப்பற்றை உணர்த்தும் விதமாக இந்திய தேசிய மாணவர் படையின் அணி வகுப்பு நடைபெற்றது. கல்லூரியின் தலைவர் மதன் செந்தில் தலைமையில் நடைபெற்ற விழாவில், ஓ.பி.ஜி குழுமத் தலைவர் கர்னல் ராஜேஷ் நாயர் தேசிய கொடியை ஏற்றிவைத்து தேசிய மாணவர் படை மாணவர்களின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து எஸ்.எம் லெப்டினன்ட் கர்னல் கிரிஷ் பார்த்தன் மாணவர்களுக்கு ராணுவத் துறையில் உள்ள பல்வேறு துறைகள் அதில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து  எடுத்து கூறினார்.

தொடர்ந்து விழாவில் முக்கிய அம்சமாக, 2ம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட 2 பீரங்கி துப்பாக்கிகள் கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்டது. முதன்முறையாக நிறுவனத்தின் தேசிய மாணவர் படை பெண்கள் பிரிவினர் இறங்கி பயிற்சியை தொடங்கினார்கள். தொடர்ச்சியாக கலை நிகழ்ச்சிகள், தற்காப்புக் கலைகள், உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இறுதியாக கல்லூரி முதல்வர் முரளிதரன் நன்றியுரையாற்றினார்.