விவசாயிகளுக்கு ஆதரவாக நடிகர் சங்கத்தினர் போராட்டம்!

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் சார்பாக நிச்சயம் போராட்டம் நடத்தப்படும் என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

மணிரத்தினம் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாக உள்ள காற்று வெளியிடை திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி கோவையில் உள்ள தனியார் கேளிக்கை வணிக வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கார்த்தி, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டது போன்று, டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் நிச்சயம் போராட்டம் நடத்தப்படும் என்றார். இதுகுறித்து சக நடிகர்களிடம் விரைவில் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் நடிகர் கார்த்தி தெரிவித்தார்.