கே.எம்.சி.எச் மருத்துவமனை சார்பாக 24 வது  கோவை மாரத்தான்-2017

கோவை கே.எம்.சி.எச் மருத்துவமனை சார்பாக, “ஆரோக்கியமான நகரம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை” பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், (10.12.2017) இன்று  மாரத்தான்  நடைபெற்றது. தொடர்ந்து 24வது முறையாக நடைபெறும் இந்நிகழ்ச்சியினை கோவை  மாநகர  காவல் ஆணையாளர் கே.பெரியய்யா அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இம்மாரத்தானில் சுமார் 3000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 18 கிலோமீட்டர் துராம் கொண்ட இம்மராத்தான் சூலூர் கே.எம்.சி.எச் மருத்துவமனையில் தொடங்கி சித்ராவில் அமைந்துள்ள கே.எம்.சி.எச் மருத்துவமனையில் நிறைவு பெற்றது.

 

இம்மராத்தானில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்குபெற்றனர். மராத்தானில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சி குறித்து கே.எம்.சி.எச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல ஜி பழனிசாமி அவர்கள் கூறுகையில்: ஒவ்வொரு ஆண்டும் உடல் ஆரோக்கியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கே.எம்.சி.எச் மருத்துவமனை சார்பாக மாரத்தான் நடைபெற்று வருகிறது. நம் அன்றாட வாழ்வில் ஒவ்வொருவரும் உடற்பயிற்சியை  மேற்கொள்ள வேண்டும். உடற்பயிற்சியானது உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே அதனை கருத்தில் கொண்டு அனைவரும் செயல்பட வேண்டும் என்றார். இந்நிகழ்வில், மருத்துவர்கள், ஊழியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.