தனலட்சுமி சீனிவாசன் சிட்பண்ட்ஸின் 3வது கிளை துவக்கம்

கோவையில் தனலட்சுமி சீனிவாசன் சிட்பண்ட்ஸ் (பி) லிமிடெட்-ன் தனது 3வது கிளையை அவினாசி சாலையில் துவக்கியுள்ளது. இந்நிகழ்ச்சியினை தனலட்சுமி சீனிவாசன் குழுமத் தலைவர் மற்றும் நிறுவனர் அ.சீனிவாசன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இந்நிறுவனத்தின் இயக்குனர் குமரன், எக்சிகியூட்டிவ் டைரக்டர் முரளி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.