கார் பந்தய வீரர்களான வெங்கடேஷ் ஷெ ரெய்ஸ், பிக்கு பாபு

மாருதி சுசுகி ஆட்டோபிரிக்ஸ் 2017 (சீசன் 1) தேசிய அளவிலான கார் பந்தயத்தின் 3வது சுற்றுப் போட்டிகள், ஈச்சனாரி செட்டிபாளையத்தில் அமைந்துள்ள ஜிடி ஓட்டுநர் உயர் பயிற்சி நிலைய வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. இப்பந்தயத்தில், வெங்கடேஷ் ஷெ ரெய்ஸ் அதிவேக அமெச்சூர் போட்டியாளர் பட்டத்தையும், பிக்கு பாபு ஒட்டுமொத்த அதிவேக வெற்றியாளர் பட்டத்தையும் தட்டிச் சென்றனர்.

மாருதி சுசுகி ஆட்டோபிரிக்ஸ் 2017 பந்தயம் மொத்தம் ஏழு சுற்றுகளாக பெங்களூர், சண்டிகர், கோயம்புத்தூர், இந்தூர், குர்கான், கவுகாத்தி, பூனா ஆகிய நகரங்களில் ஆறு மாத காலத்தில் நடத்தப்படுகிறது. இதன் இறுதிச் சுற்று பிப்ரவரி 25,2018 கிரேட்டர் நொய்டாவில் புத் இண்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடைப்பெறவுள்ளது.

அனைத்து சுற்றுகளிலும் வெற்றி பெறுபவர்களுக்கு புத்தம் புதிய மாருதி சுசுகி ஸ்விப்ட் கார் பரிசு வழங்கப்படவுள்ளது. மேலும், ஒவ்வொரு சுற்றிலும் பங்கேற்று வெற்றி பெறுவோருக்கு பிரிவு வாரியான பரிசுகளும், பதக்கங்களும் வழங்கப்பட உள்ளது.