சாலை தடூப்புவேலிகளை காவல்துறையிடம் வழங்கிய பயர்பேர்ட் கல்வி நிறுவனம்

கோவையின் முன்னணி டெக்ஸ்டைல்ஸ்‌ நிறுவனமான சிவா டெக்ஸயார்ன்‌ நிறுவனத்தின்‌ சார்பு கல்வி நிறுவனமான பயர்போ்ட் மேலாண்மை கல்லூரி போத்தனூர்‌ செட்டிபாளையம்‌ பகுதியில்‌ செயல்பட்டு வருகிறது. மேலாண்மை கல்வியில்‌ தனித்துவமிக்க அனுபவம்‌ வாய்ந்த பேராசிரியர்களைக் கொண்டு மாணவ மாணவியர்களுக்கு சிறந்த பயிற்சியினை வழங்கி வருகிறது.

இக்கல்வி நிறுவனத்தின்‌ சமுதாயப்பணியாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு ஆலோசனையின்‌ பேரில்‌ சாலை விபத்துகளை தடூக்கும் வகையில் தடுப்பு வேலிகள்‌ தயார்‌ செய்யப்பட்டு பொள்ளாச்சி டூ கோவை சாலையில் மலுமிச்சம்பட்டி அருகிலும் மற்றும்‌ போத்தனூர்‌ டூ செட்டிபாளையம்‌ சாலையில் மயிலாடூம்பாறை பேருந்து நிறுத்தத்தின்‌ அருகிலும்‌ வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, செட்டிபாளையம்‌ காவல்நிலைய உதவி ஆய்வாளர் மற்றும்‌ காவலர்களின்‌ உதவியுடன்‌ அடிக்கடி விபத்துகள்‌ நடைபெறும்‌ பகுதிகளை கண்டறிந்து அங்கும் வைக்கப்பட்டது.

சிவா டெக்ஸ்யார்ன்‌ நிறுவனத்தின்‌ சார்பில் கொரோனா வைரஸ்‌ நோய் தொற்று பாதிப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும்‌ வகையில்‌ முகக்கவசங்களை கோவை மாவட்டத்தில்‌ உள்ள காவலர்கள்‌, மாநகராட்சி பணியாளர்கள்‌ மற்றும்‌ மாநகராட்சி ஊழியர்கள்‌ என சுமார்‌ 10,000த்திற்கும்‌ மேற்பட்டோருக்கு மாவட்ட நிர்வாகத்தின்‌ மூலம்‌ வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.