கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவர்களுக்கு வகுப்புகள் துவக்கம் !

கொரோனா வைரஸ் நோய் தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டிருந்தது. தமிழகத்தில் நோய் தொற்றின் வீரியம் குறைந்து இயல்பு நிலை திரும்புகிறது. இந்நிலையில் கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று (2.12.2020) முதல் துவங்கியுள்ளது.

முதற்கட்டமாக இன்று (2.12.2020) அறிவியல் பாட துறைகளில் முதுகலை பயிலும் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் துவங்குகிறது. கல்லூரிக்கு வரும் மாணவர்களை ஸ்கேனர் கொண்டு காய்ச்சல் பரிசோதனை செய்து சானிடைசர் பயன்படுத்திய பிறகே மாணவர்கள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். சமூக இடைவெளியை கடைபிடித்து வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.