ஸ்ரீவத்ஸ கார்டனில் கார்த்திகை தீப திருவிழா

துடியலூர் ஸ்ரீவத்ஸ கார்டன் குடியிருப்பு வளாகத்தில் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

350க்கும் மேற்பட்ட வீடுகள் கொண்ட இந்த வளாகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். அவ்வகையில் இன்று 1.12.2020 நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தார், அவரவருக்கென ஒதுக்கப்பட்ட நேரத்தில் பொதுவான விளையாட்டு மைதானத்தில், முறைப்படுத்தப்பட்ட வகையில் வடிவமைப்பில் வைக்கப்பட்ட 1008 தீபங்களை அனைவரும் ஏற்றினர்.

இது ஒற்றுமையையும், சமூகக் கோட்பாட்டினையும் வெளிப்படுத்தியதுடன், காண்பவர் உள்ளத்தையும் கவரும் வகையில் அமைந்தது.

இதில் அனைவரும் கட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு முறையே பங்குபெற்று, தீபம் ஏற்றியது குறிப்பிடத்தக்கது. இதற்கு இந்த வளாகத்தின் அசோசியேசன் தலைவர், செயலர் மற்றும் அனைத்து உறுப்பினர்களும் சிறப்பான ஏற்பாடுகள் செய்து வளாகத்தை ஒளிரச் செய்தனர்.