நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் அன்பரசனுக்கு சிறந்த சமூக ஆர்வலர் விருது

எய்ட்ஸ் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், ஆண்டுதோறும் டிசம்பர் 1-ம் தேதி உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. இத்தினத்தில் சமூகத்தில் சிறந்த சேவையாற்றும் சமூக ஆர்வலர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். அந்த வகையில், கோவை எட்டிமடை திருமலையம்பாளையம் பகுதியில் உள்ள அசிசி ஸ்னேஹாலயா சேரிட்டபிள் டிரஸ்ட் வளாகத்தில் நடைபெற்ற விழாவில் நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் அன்பரசன் சிறந்த சமூக ஆர்வலர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.