சர்வதேச அங்கீகாரம் பெற்ற கோவை விதை பரிசோதனை நிலையம்

இந்தியாவில் அரசு சார்ந்த கோவை விதை பரிசோதனை நிலையம் ஒன்று தான் “இஸ்டா” சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளது. இங்கு சர்வதேச நடைமுறைகளின்படி, விதை பரிசோதனை மேற்கொள்ள பரிசோதனை செய்து வழங்கப்படும் சான்றிதழ்களை உள்நாடு மட்டுமின்றி சர்வதேச விதை வர்த்தகத்திலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்த சிறப்பு அங்கீகாரத்தால், ஏற்றுமதி விதைகளுக்கான ஆரஞ்சு மற்றும் நீல வண்ண சர்வதேச விதை மாதிரி சான்றிதழ் வழங்கப்படும். ஆரஞ்சு வண்ண சர்வதேச விதை குவியல் சான்றிதழ் ரூ.4000/-ம், நீல வண்ண சர்வதேச விதை மாதிரி சான்றிதழ் ரூ.2000/-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள், தனியார் விதை விற்பனை நிறுவனங்கள், தனியார் விதை உற்பத்தியாளர்கள் மாதிரிகளை கொடுத்து விதை தரச்சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம்.