சர்க்கரை நோயாளிகளுக்கு உணவுக் கட்டுப்பாடு அவசியம்

நம்முடைய உடல், இரத்தத்திலுள்ள சர்க்கரையை ஆற்றலுக்காகப் பயன்படுத்துகின்றது. அவற்றை நமது உடலால் சரியாகப்  பயன்படுத்த முடியாமல் போகும்போது ஏற்படுகின்ற ஒரு நிலையே, நீரிழிவு நோய். அதை சரி செய்யாவிட்டால், அதாவது நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைக்காவிட்டால் நீங்கள் பார்வையை இழக்கலாம். உங்களுக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படலாம் அல்லது உறுப்பு நீக்கம்கூட செய்யப்படலாம்.

  1. உலக மக்கள் தொகையில் 86 மில்லியன் சதவிகிதம் Pre-diabetes என்ற நிலையில் உள்ளார்கள்.
  2. பேறுகால சர்க்கரை நோயால் பாதிக்கப்படுபவர்களில் 50 சதவிகிதம் பேருக்கு 5 முதல் 10 ஆண்டுகளில் சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

மேற்கூறிய இரண்டு பிரிவினருக்கும் சர்க்கரை நோய் வராமல் இருக்கவும், சர்க்கரை நோய் வந்தவர்கள் அவற்றை கட்டுப்பாட்டுடன் வைக்கவும் பின்வரும் மூன்று வழிமுறைகளைப் பின்பற்றலாம்:

சரிவிகித உணவு

உடற்பயிற்சி

நீண்ட உறக்கம்

உணவுக்கட்டுப்பாட்டு முறைகள்:

1.நீரிழிவு நோய்க்கு முக்கிய எதிரியான வெள்ளை நிற உணவுகள், அதாவது சர்க்கரை, மைதா மாவில் செய்த உணவுப் பண்டங்கள், பரோட்டா போன்றவற்றை நாம் உட்கொள்ளும் உணவில் இருந்து நீக்க வேண்டும்.

2.சாப்பிடும் உணவின் அளவைக் குறைத்து, 4-5 முறையாகப் பிரித்து உண்ண வேண்டும்.

3.கொழுப்புச்சத்து குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

  1. தாவர மற்றும் ஆலிவ் எண்ணெய் உபயோகியுங்கள். ஆனால் அதையும் குறைவாகவே பயன்படுத்துங்கள்.

5.இறைச்சியை குறைவாகவும், மீனை அதிகமாகவும் (வாரம் இருமுறை) சாப்பிடுங்கள்.

  1. காய்கறிகள், பழங்கள் அதிக அளவில் உட்கொள்ள வேண்டும்.
  2. பிஸ்கெட்டுகள், சாக்லெட், மொறுமொறுப்பான தீனிகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
  3. ஆற்றல் பானங்கள், சுறுசுறுபானங்கள் தவிர்த்து அதிக அளவில் தண்ணீர் பருகுங்கள்.

உடற்பயிற்சி முறை:

  1. வெறும் மருந்தை மட்டுமே தீர்வாகக் கொள்ளக் கூடாது. தினமும் 30 நிமிடம் நடக்க வேண்டும். அதாவது ஒரு வாரத்தில் 150 நிமிடங்களாவது நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.
  2. குறைவான நேரம் அமர்ந்திருக்க முயற்சியுங்கள்.

சர்க்கரை நோயாளிகள் பின்பற்ற வேண்டியவை:

  1. மருத்துவர் குறிப்பிட்ட நேரத்தில் தேவையான இரத்தப்பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும்.
  2. உணவுமுறை நிபுணரின் ஆலோசனையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
  3. வருடம் ஒருமுறை பல் மற்றும் கண் டாக்டரிடம் சென்று பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
  4. நீங்கள் புகைப்பிடிப்பவராக, மது அருந்துபவராக இருந்தால், உடனே நிறுத்தி விடுங்கள்.
  5. உண்ணாவிரதம் இருக்கக் கூடாது.
  6. கூடவே மன அழுத்தம் கூடாது.

7.நன்கு உறங்குங்கள்.

  1. தினமும் உங்கள் பாதங்களில் ஏதேனும் உணர்வு இழப்பு உள்ளதா என்றும், நிறத்திலோ அல்லது வடிவத்திலோ மாற்றம் உள்ளதா என்றும் சோதியுங்கள்.
  2. குளிர்கால ஜூரத்திற்கானத் தடுப்பு ஊசியைப் போட்டுக் கொள்ளுங்கள்.