ஜெம் மருத்துவமனையில் கணைய புற்றுநோய் வெற்றியாளர்களின் கலந்தாய்வு

 

ஜெம் மருத்துவமனையில் கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து குணமடைந்தவர்களின் சந்திப்பு மற்றும் கலந்தாய்வு அண்மையில் நடைபெற்றது. கணைய அறுவை சிகிச்சை பற்றிய விழிப்புணர்வு மற்றும் முறையான சிகிச்சை முறைகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்து சொல்லும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் கணைய புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, மேற்கு மண்டல காவல்துறை ஆணையர் பாரி ஐபிஎஸ் தலைமை விருந்தினராகவும், கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

ஜெம் மருத்துவமனையின் கல்லீரல் கணைய சிறப்பு சிகிச்சை பிரிவின் தலைவர் டாக்டர் ப.செந்தில்நாதன் வரவேற்புரை வழங்கினார். ஜெம் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் சி.பழனிவேலு கணைய புற்றுநோயின் சிகிச்சைக்கு ஜெம் மருத்துவமனையின் பங்களிப்பை குறித்து விவரித்து பேசினார். மேலும், கடந்த 25 ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் ஜெம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்தார். கல்லீரல் கணைய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆனந்த் விஜய் நன்றியுரை வழங்கினார்.