கவர்னரிடம் தங்க பதக்கம் பெற்ற கே.பி.ஆர். மில் பெண் தொழிலாளர்கள்

தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் 10ஆவது பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்றது. தமிழக ஆளுநர் கே.பி.பன்வாரிலால் புரோகித் மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வாழ்த்துரை வழங்கினார்.

இந்நிகழ்வில், கே,பி,ஆர் மில் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே பல்கலைக்கழகத்தில் பயின்ற 13 பெண்கள் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில், மீனாட்சி என்ற மாணவி (BBA) பிரிவில் முதலிடமும், ஜெகஜோதி என்ற மாணவி (BCA) பிரிவில் முதலிடமும், ஜெயபிரதா என்ற மாணவி (BCA) பிரிவில் முதலிடமும், புஷ்பா என்ற மாணவி (BBA) பிரிவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

நிறுவனத் தலைவர் கே.பி.ராமசாமி பட்டம் பெற்ற மாணவிகள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.