இளம் தொழில்முனைவோர்களின் புதிய நிறுவனம் ‘மை’

கோவையைச் சேர்ந்த கவின்குமார் கந்தசாமி மற்றும் ராஜா பழனிசாமி ஆகிய 2 இளம் தொழில்முனைவோர்கள் தற்போதையசூழலில்தனிப்பட்ட வாழ்க்கைக்கு பாதுகாப்பு அளிக்கும் பொருட்களைத் தயாரிக்க ‘மை’ எனும் நிறுவனத்தைத் துவக்கி உள்ளனர்.

6வது ஐ.நா. சுற்றுச்சூழல் நிர்வாக இயக்குநரும்,ஐக்கிய நாடுகள் சபைதுணைப் பொதுச்செயலாளருமான எரிக் சோல்ஹெய்ம் மற்றும் யூதிங்க் சர்வதேச அறக்கட்டளை நிறுவனர் அப்துல் கனி ஆகியோர் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிறுவனம் இந்தியாவில் தயாரித்த தனது புதிய யூவி பேக்கெட் சானிடைசர் மற்றும் யூவி சேப் டேபிள்டாப் சானிடைசர் மற்றும் வைரஸ் தடுப்பு முகக்கவசம், கழுத்தில் அணியும் ஸ்கார்வ் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளை அறிமுகம் செய்தது.

நிறுவனத்தலைமை செயல் அதிகாரியும் நிறுவனருமான கவின்குமார் கந்தசாமி பேசுகையில்,எதிர்காலத்தில் சுகாதார சவால்களை எதிர்கொள்வதற்கு நாம் உலக நாடுகளை நம்பியிருக்காமல்,நாமே அவற்றை எதிர்கொள்ள முடியும் என்பதை உறுதி செய்வதற்காக ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் உற்பத்தி ஆகியவற்றில் நாங்கள் அதிக அளவில் முதலீடு செய்துள்ளோம்என்றார்.

துணை நிறுவனரும் வர்த்தக செயல்பாட்டு தலைமை அதிகாரியுமான ராஜா பழனிசாமி பேசினார்.இந்த பிராண்டிற்கான நல்லெண்ண தூதரும் யூதிங்க் சர்வதேச அறக்கட்டளை நிறுவனருமான அப்துல் கனி பேசுகையில்,‘மேட் இன் இந்தியா’திட்டத்தில் தயாரிக்கப்படும் பாதுகாப்பு பொருட்களானது ஒரு சிறந்த முன்முயற்சி. இவை இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கே உதவிடும் வகையில் இருக்கும்என்றார்.

இதன் உற்பத்தி ஆலைகள் கோவை, திருப்பூர் மற்றும் பெங்களூர் ஆகிய இடங்களில் உள்ளது. இங்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் 250க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள்.