பார்க் குளோபல் பள்ளியில் ஹாலோவீன் தினம்

உலகளவில் அக்டோபர் 31ம் தேதியை ஹாலோவீன் தினம் என கொண்டாடுகிறார்கள். புனிதர்கள் மற்றும் தியாகிகள் உட்பட இறந்தவர்களை நினைவுகூருவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட பிரபலமான மேற்கத்திய நிகழ்வுதான் இது.

இந்நிகழ்வு பார்க் குளோபல் பள்ளி மாணவர்கள் (30.10.2020) அன்று இணைய வழியில் அவர்களின் வீடுகளில் இருந்தவாரே பைரேட்ஸ், மந்திரவாதிகள், பேய்கள், காட்டேரிகள், டார்சன் மோக்லி, பலூ பியர், கிட்ஸ் டைகர், ஹூடி யானை, ஓநாய் போன்ற வேடம் அணிந்து இந்த நாளை கொண்டாடினர்.

பார்க் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் அனுஷா ரவி இணையதளம் வழியாக பங்குபெற்ற அனைவரையும் வாழ்த்தி பேசினார். இந்த விழாவின் நோக்கமானது குழந்தைகள், ஆத்துமாக்கள், பேய், ஆவி பற்றிய பயத்தை போக்கவும் மரண பயத்தை போக்கவும் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது.