பட்டாசு வாங்கும் போது கவர்ச்சிகரமான தள்ளுபடிகளை நம்பி ஏமாற வேண்டாம்

தீபாவளி நெருங்கி வரும் நிலையில் பட்டாசு வாங்கும் போது  பட்டாசுகளில் கவர்ச்சிகரமான தள்ளுபடிகளை நம்பி ஏமாற வேண்டாம் என ராஜவீதி பரமேஸ்வரி ஸ்டோர்ஸ் பட்டாசு விற்பனையாளரான உமாபதி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் தீபாவளி இன்னும் சில நாட்களில் வரும் நிலையில், இந்த வருட தீபாவளி பட்டாசு விற்பனை குறித்து கோவை ராஜவீதி பகுதியில் கடந்த இருபத்தைந்து  ஆண்டுகளாக  பட்டாசு விற்பனையில் இருக்கும் ஸ்ரீ பரமேஸ்வரி பேப்பர் ஸ்டோர்ஸ் உரிமையாளர்  உமாபதி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் இந்த வருடம் பட்டாசு விலையில் பெரிதாக மாற்றங்கள் எதுவும் இல்லை எனவும், கொரோனா கால ஊரடங்கால் இந்த  ஆண்டு முழுவதும் எந்தவித பொழுது போக்கு நிகழ்ச்சிகளும் இல்லாத நிலையில் தீபாவளி பண்டிகையை அனைவரும் எதிர்பார்த்து இருப்பதாகவும், இதனால் தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்கள் இப்போதே தயாராகி வருவதாக கூறினார். குறிப்பாக பட்டாசுகள்  வாங்கும் போது கவர்ச்சி கரமான தள்ளுபடி விளம்பரங்களை பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம் எனவும், தள்ளுபடி என்ற பெயரில் தரமற்ற பட்டாசுகள் தற்போது சில இடங்களில் விற்பனை  செய்யபட்டு வருவதாக கூறிய அவர், ஆயிரம் வாலா பட்டாசு என்ற பெயரில் வெறும் முன்னூறு தொகுப்புகள் கொண்ட பட்டாசுகளை விற்று பொதுமக்களை சிலர் ஏமாற்றுவதாக தெரிவித்தார்.

இங்கு வாடிக்கையாளர்களின் நெரிசலை குறைக்கும் விதமாக  முன்பதிவு வசதியில் பட்டாசு விநியோகம் செய்யப்படுகிறது. www.sreeparameshwaristores.com எனும் இணையதள முகவரியில்  விலை பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 94420 19949 என்ற மொபைல் எண்ணிலும் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யும் வசதி அறிமுகபடுத்தபட்டுள்ளது.