கவிதாசனின் வெற்றிச் சிந்தனைகள் திறனாய்வு நூல் வெளியீட்டு விழா

கோவை ரூட்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியின் செயலர் சிந்தனை கவிஞர் கவிதாசன், கிருஷ்ணவேணி ஆகியோரின் புதல்வன் கவி.சித்தார்த் மற்றும் உடுமலைபேட்டை ராமசாமி, குணவதி ஆகியோரின் புதல்வி ரா.சூர்யா ஆகியோரின் திருமணம் பல்லடம் சாலை ஸ்ரீ விக்னேஷ் மகாலில் 26.10.2020 அன்று நடைபெற்றது.

இவ்விழாவில் கொங்குநாடு கலை அறியியல் கல்லூரியின் தேர்வாணையர் மற்றும் தமிழ்த்துறைத் தலைவர் முருகேசன் எழுதிய  கவிதாசனின் வெற்றிச் சிந்தனைகள் திறனாய்வு நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.  இதில் கோவை, மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பெரியய்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட தஞ்சாவூர், தமிழ் பல்கலைக்கழக, முன்னாள் துணை வேந்தர் சுப்ரமணியம் பெற்றுக்கொண்டார்.