கொரோனா எதிரொலியால் வெறிச்சோடி காணப்படும் சிங்காநல்லூர் பேருந்து நிலையம்

பண்டிகை நாட்களில் வெளியூர் செல்வதற்கு பயணிகள் வராத காரணத்தினால் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.

தென் மாவாட்ட மக்கள் தங்கி வேலைபார்க்கும் மிக முக்கியமான இடம் கோவை. வார விடுமுறை மற்றும் விழா காலங்களில் தங்களுடைய செந்த ஊருக்கு செல்வதற்கு மக்கள் அலையாக கூட்டம் கூட்டமாக வருவார்கள், நிற்பதற்குகூட இடமில்லாமல் இருக்ககூடிய சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் கொரோனா எதிரொலியால் வெறிச்சோடி காண்படுகிறது.

சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை, திருச்சி, கரூர், ராமேஸ்வரம் போன்ற தென்மாவட்டங்களுக்கு அதிகமான பேருந்துகள் இங்கிருந்து தான் செல்கின்றது. கடந்த ஆயுத பூஜையின் போது கோவையில் இருந்து 350 பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால், இந்த ஆண்டு ஆயுத பூஜையின் போது 60% பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. பயணிகள் யாரும் வராத காரணத்தினால் சிங்கநல்லூர் பேருந்து நிலையத்தில் ஆங்காங்கே பஸ்கள் நிறுத்தப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும், வெளியூர் சொல்வதற்கு பேருந்தில் மிகக் குறைந்த நபர்களே வைத்து பேருந்து பயணம் செய்கின்றனர்.