பழனியில் ஏப்.,3-ல் பங்குனி உத்திர விழா

 

பழனி முருகன் கோவிலில் ஏப்ரல் 3-ம் தேதி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. பிரசித்தி பெற்ற பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற உள்ளதால் முன்னேற்பாடுகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்காக அனைத்து வசதிகளும் செய்யப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் வினய் கூறினார். பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் வசதிக்காக 42 இடங்களில் பந்தல் அமைக்கப்பட உள்ளதாக கலெக்டர் கூறினார். மருத்துவ முகாம்கள், கழிப்பிட வசதி உள்ளிட்ட அனைத்த வசதிகளும் செய்யப்பட உள்ளன. திருச்சி, தேனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வருவதற்காக பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பக்தர்களின் பாதுகாப்பு பணியில் 3,000 போலீஸாரை ஈடுபடுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.