கோபியில் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் 600 மரக்கன்றுகள் நடப்பட்டன

ஈரோடு, கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதி நகராட்சிக்குட்பட்ட 11வது வார்டில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஐயப்பா நகர் பூங்காவில் சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்களை வழங்கி பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.

மேலும், அமைச்சர் பூங்காவில் 600 மரக்கன்றுகளை நட்டு வைத்தும், ஆசிரியர் காலனியில் புதிய ஆழ்குழாய் கிணற்றுடன் 2000லிட்டர் கொள்ளளவு கொண்ட சின்டெக்ஸ் டேங்க் அமைத்து வித்தியா நகர், பூரணி நகர், ஆசிரியர் நகர் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் பணியையும் துவக்கி வைத்தார். இதில் கோட்டாட்சியர் ஜெயராமன், ஆவின் தலைவர் காளியப்பன், தாசில்தார் தியாகராஜன், நகராட்சி ஆணையாளர் தாணு மூர்த்தி, நகர மாணவரணி செயலாளர் செல்வராஜ், ஏ.என்.முத்துரமணன் மற்றும் நகராட்சி அலுவலக பணியாளர்கள் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.