கொங்கு கணபதி கோயில் கும்பாபிஷேகம்

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் கொங்கு கணபதி திருக்கோயிலின் நன்னீராட்டு விழா இன்று (23.10.2020) கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், தென்சேரி மலை ஆதினம் முத்துசிவராமசாமி அடிகளார், கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குனர் சி.ஏ.வாசுகி, பொருளாளர் பரமசிவன் ஆகியோரது தலைமையில் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது. பின்னர், கொங்கு கணபதி வழிபாடு மலர் என்ற நூலினை பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் வெளியிட்டார்.

இவ்விழாவில் கல்லூரி பேராசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.