ஜவுளிக்கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஒப்பணக்கார வீதியில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையாளர் அப்பகுதிகளில் உள்ள அனைத்து ஜவுளிக்கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் நேரடியாக சென்று கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியினை பின்பற்றுகின்றனரா என ஆய்வு செய்த பின்பு அங்குள்ள விற்பனை மேலாளர்களிடம் கடைகளின் முகப்பு வாயில் முன்பு கிருமி நாசினி வைக்கப்பட வேண்டும் எனவும், அனைவரும் முகக்கவசம் அணிந்து வரவேண்டும், சமூக இடைவெளியினை பின்பற்ற வேண்டும் என வாடிக்கையாளர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் எனவும், ஒலிப்பெருக்கி மூலம் தொடர்ந்து இதுகுறித்த அறிவிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும், தீபாவளி பண்டிகை நெருங்குவதால் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது மத்திய மண்டல உதவி ஆணையர் மகேஷ்கனகராஜ், மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.