கேபிஆர் கலை கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கே.பி.ஆர் கலை கல்லூரியின் மேலாண்மைத் துறையும், கோயம்புத்தூர் ஹொவ்ரைசன் ட்ரைனிங் அகாடமியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

கோவை கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் மேலாண்மைத் துறையும் சார்பில் கல்லூரி முதல்வர் பாலுசாமியும், கோயம்புத்தூர் ஹொவ்ரைசன் ட்ரைனிங் அகாடமியின் தலைவர் மூசா கலிமுல்லா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கல்லூரியின் உடனானப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்நிகழ்வில் ஏற்றுமதி, இறக்குமதி பற்றிய வழிமுறைகளும் அதன் சட்ட திட்டங்களும் எடுத்துரைக்கப்பட்டது.

பின்னர் சிறப்புவிருந்தினர், ஏற்றுமதியாளர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள் குறித்தும் ஏற்றுமதி அதிகரிப்பால் நம் நாட்டின் பொருளாதார நிலை மேம்படும் என்பதையும் எடுத்துரைத்தார். மேலும், மதிப்பு கூட்டப்பட்டத் தயாரிப்புகளாகக் கருவேப்பிலைப் பொடியில் மூலிகை கலந்து விற்பனை செய்தல் மற்றும் தேநீரில் பல சுவைகளைக் கூட்டுதல் போன்ற லாபம் ஈட்டும் தொழில்களை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பதை எடுத்துரைத்தார். தொடர்ந்து, இந்தியாவில், கச்சா எண்ணெய், தங்கம் மற்றும் இரசாயன உரங்கள் போன்றவைகள் வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகின்றது என்பதை எடுத்துக்கூறி இது நம்நாட்டின் ஏற்றுமதியை விட அதிகமாக இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.

அன்னியச் செலாவணியை அதிகரிப்பதற்கும் நிதி நெருக்கடியைச் சமாளிப்பதற்காகவும் நம் நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்கச் செய்ய வேண்டும் மற்றும் இறக்குமதியைக் குறைக்க வேண்டும் என்று எடுத்துரைத்தார்.