ஆர்ஆர்ஆர் படத்தின் பீம் டீஸர்

பாகுபலி வெற்றிக்கு பிறகு இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்.ஆர்.ஆர். இந்த படத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கிறார்கள். சுதந்திரப் போராட்ட வீரர்கள் அல்லூரி சீதாராம ராஜூ, கொமாரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்படும் இப்படம் ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது. இதில் சீதாராம ராஜூவாக ராம் சரணும், கொமாரம் பீமாக ஜூனியர் என்.டி.ஆரும் நடிக்கின்றனர்.

இதற்கு முன்னர், ராமராஜூவாக ராம் சரண் தோன்றும் ஃப்ர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய படக்குழு, தற்போது கொமாரம் பீம் ஆக வரும் ஜூனியர் என்.டி.ஆரின் டீசரை வெளியிட்டுள்ளனர். இன்று காலை வெளியிடப்பட்ட ஜூனியர் என்.டி.ஆரின் ‘பீம்’ ஃப்ர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படம் 2021ம் ஆண்டு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னட மற்றும் இந்தி மொழிகளில் வெளியிடப்படுகிறது.