செல்லப்பிராணிகள் விற்பனை செய்வோர்கள் தமிழ்நாடு பிராணிகள் நல வாரியத்தில் பதிவு செய்யவேண்டும்

கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் செல்லப்பிராணிகள் விற்பனை நிலையங்கள் மற்றும் நாய் இனங்கள் இனப்பெருக்கம் செய்து விற்பனை செய்யும் நிலையங்கள் ஆகியவற்றை தமிழ்நாடு பிராணிகள் நல வாரியத்தில் பதிவு செய்யவேண்டும். அதற்கு பிறகே செயல்பட அனுமதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து செய்தி வெளியாகியுள்ளது.

செல்லப்பிராணிகள் விற்பனை செய்ய பதிவு செய்வோர்கள் அதற்கான விண்ணப்ப படிவத்தை http://www.tn.gov.in என்ற இணையதளத்தில் “Animal Husbandry Department” தளத்தில் “Rules and Regulatioins” என்ற உட்பிரிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பொது அறிவிப்பு செய்த தேதியிலிருந்து 60-நாட்களுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் திரும்ப பெற இயலாத ரூ.5000க்கான வங்கி  வரைவோலையினை “Member Secretary, Tamilnadu Animal Welfare Board” என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் எடுத்து தமிழ்நாடு பிராணிகள் நல வாரியம், இயக்குநர் அலுவலகம் கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள், 571 அண்ணாசாலை, கால்நடை பன்முக மருத்துவமனை வளாகம், நந்தனம், சென்னை -35. என்ற முகவரியில் நேரிடையாக அனுப்பியோ அல்லது மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை, கால்நடை பன்முக மருத்துவமனை வளாகம், இஸ்மாமில் ராவுத்தர் ரோடு, டவுன்உறால், கோயம்புத்தூர் 641 001 (அலைபேசி எண். 94450 01135) என்ற முகவரியில் நேரிடையாக ஒப்படைத்தோ மேற்காண் நிலைய உரிமையாளர்கள் பதிவு செய்து கொள்ளவேண்டும்.