இந்துஸ்தான் கல்லூரியில் ‘திருநங்கைகள் அன்றும் இன்றும்’ இணைய வழிக் கருத்தரங்கு

கோவை இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியின் மொழித்துறை சார்பாக இணைய வழி தேசியக் கருத்தரங்கம் “திருநங்கைகள் அன்றும் இன்றும்” எனும் பொருண்மையில் அக்டோபர் 16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது.

நிகழ்வின் முதல் நாள் அய்யப்பன் ‘இலக்கியத்தில் திருநங்கைகள்’ என்ற தலைப்பிலும், இரண்டாம் நாள் திருநங்கை பிரியாபாபு ‘இன்றைய சமுதாயத்தில் திருநங்கைகள்’ என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினர்.

தமிழகம் முழுவதிலிருந்தும் பாண்டிச்சேரி, அந்தமான், புதுதில்லி எனப் பல்வேறு இடங்களிலிருந்தும் ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் பலரும் பெருவாரியாக பங்கெடுத்துக் கொண்டனர்.

நிகழ்வைச் சிறப்பாக ஒருங்கிணைத்த தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் ஜமுனாராணி, கணேசன் ஆகியோரை மொழித்துறைத் தலைவர் ரமேஷ்குமார், கல்லூரி முதல்வர் பொன்னுசாமி மற்றும் இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரி கருணாகரன் ஆகியோர் பாராட்டினர்.

கல்லூரியின் தலைவர் கண்ணையன், இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், கல்லூரி செயலர் பிரியா சதீஷ்பாபு ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.