நதியே கடலாகிறது

 

“கடலில் கலப்பதற்கு முன்பு

நதி பயத்துடன் நடுங்குகிறது.

 

பயணித்த பாதையை திரும்பிப் பார்க்கிறது.

 

மலைகளைத்தாண்டி காடுகளையும் கிராமங்களையும்

குறுக்கும் நெடுக்குமாக

நீண்ட பாதையை கடந்து வந்திருக்கிறது.

 

தற்போது நதி

தன் முன்னுள்ள

கடலைப் பார்க்கிறது.,

 

கலந்தால்

மறைந்தாக வேண்டும்

வேறு வழியில்லை.

நதி…

திரும்பிச் செல்ல முடியாது.

 

யாரும்

திரும்பிச் செல்ல முடியாது. திரும்பிச் செல்வது சாத்தியமில்லை.

 

நதி கடலுக்குள் கலக்கும் அபாயத்தை சந்திக்க வேண்டும்.

அப்போதுதான் பயம் விலகும்.

 

கடலில் கலப்பதால்

நதி மறைந்து போகவில்லை

கடலாகவே மாறியதை உணர்ந்து கொள்ள முடியும்.”

 

என்ற கலீல் கிப்ரான் அவர்களின் கவிதையை வாசிக்கிற போது கிடைக்கும் அனுபவம் மகத்தானது.

 

ஆம்!

தொடங்கிய பயணத்தில்

இறுதி இலக்கில் இருந்து திரும்ப முடியாது.

 

பயணித்துத்தான் ஆக வேண்டும்.

அச்சத்தோடு பார்த்துக் கொண்டிருப்பதை விட

எதிர்கொள்வது நல்லது.

 

கடலில் கலக்கும் நதி மறைந்ததாக நினைப்பது அச்சம்.

நதியே கடலாகிறது

என்பதே நம்பிக்கை.

 

நம்பிக்கையோடு வாழ்வை எதிர்கொள்வோம்.

கடைசி நேரத்தில் திரும்புவதை விட

எதிர்கொண்டு சந்திப்பது ஆபத்தல்ல, அனுபவம்.

 

எது நடந்தாலும்

ஏற்கும் துணிவு

எப்போதும்

நன்மை தரும்.

 

நன்மையும்

மகிழ்ச்சியும்

நாளும் நாளும்

பெருகட்டும்.

 

வாழ்த்துகள்.

அன்புடன்,

அ. முகமது ஜியாவுதீன்