ஜவுளிப் பொருட்களின் சர்வதேச கண்காட்சி – 2017

கோவை கொடிசியா வளாகத்தில் சைமாவின் ஜவுளி இயந்திரங்கள், உதிரிபாகங்கள் மற்றும் ஜவுளிப் பொருட்களின் சர்வதேச கண்காட்சி இன்று (17.11.17) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சைமாவின் தலைவர் பி.நடராஜ் வரவேற்புரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக லக்ஷ்மி மெசின் வொர்க்ஸ் லிமிட்டெட்டின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான சஞ்சய் ஜெயவர்த்தனவேலு கலந்து கொண்டு விழாவினை துவக்கி வைத்தார்.

மேலும், இந்நிகழ்ச்சியில் சைமாவின் துணைத் தலைவர் கே.விநாயகம், அஷ்வின் சந்திரன், டெக்ஸ்டைல் மெசினரி, மில்ஸ் ஸ்டோர்ஸ் மெர்சண்ட்ஸ் அசோசியேசன் கோவை தலைவர் அஜய் டி ஷா மற்றும் இந்தியன் டெக்ஸ்டைல் ஆக்சசரிஸ் மற்றும் மெசனரி மேனுபாக்சர்ஸ் அசோசியேசன் தலைவர் கைசர் ஜட் மகுவாலா ஆகியோர் கலந்து கொண்டனர்.