கேஐடி கல்லூரியில் யுஏவி ஆராய்ச்சிக் கூடம் திறப்பு

கோவை கேஐடி – கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியின் ஏரோனாடிக்கல் என்ஜினீயரிங் துறையும், சென்னை அண்ணா பல்கலைகழகம் எம்ஐடி (சென்டர் ஃபார் ஏரோஸ்பேஸ் ரிசர்ச்)யும் இணைந்து யுஏவி ஆராய்ச்சிக் கூடத்தை கேஐடி, கல்லூரி வளாகத்தில் நிறுவியது.

இதன் விளைவாக மாணவர்கள் பயன்பெறும் வகையில் “யுஏவி சிஸ்டெம் டிசைன் அண்ட் இட்ஸ் ரியல் டைம் இம்ப்ளிமெண்டேஷன்” என்ற தலைப்பில் சான்றிதழ் படிப்பு அண்ணா பல்கலைக்கழகத்தின் இயக்குநர் செந்தில்குமார் அவர்களால் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதன் முலம் அனைத்து துறையைச் சார்ந்த மாணவர்கள் பயனடைவார்கள். இச்சான்றிதழ் படிப்பின்முலம் மேலும் வளருகின்ற தொழில்நுட்பத்தில் குறிப்பாக ராணுவம், விவசாயம் மற்றும் மருத்துவம் துறைகளில் மாணவர்கள்  தங்கள் திறனை வெளிப்படுத்தி பெரிதும் பயனடைவார்கள். மேலும், இச்சான்றிதழ் படிப்பின் தொடக்க விழாவில் கல்லூரி துணைத் தலைவர் இந்து முருகேசன், கல்லூரி முதல்வர், துணை முதல்வர், ஏரோனாடிக்கல் துறைத்தலைவர் மற்றும் அனைத்து துறைத்தலைவர்கள் பங்கேற்றனர்.