தமிழக விவசாயிகள் போராட்டத்திற்கு முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ ஆதரவு

விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் போராட்டத்திற்கு உணர்வுப்பூர்வமாக ஆதரவு தெரிவிப்பதாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள கட்ஜூ விவசாயிகளை பாதுகாக்கவும், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழகம் முழுவதும் இன்று போராட்டங்கள் நடைபெறும் என தெரிவித்துள்ளார். இந்த போராட்டங்களுக்கு தாம் உணர்வுபூர்வமாக ஆதரவை தெரிவித்துக் கொள்வதாகவும் மார்கண்டேய கட்ஜூ குறிபிட்டுள்ளார்.