உதிரி பாகங்கள் இறக்குமதி வரி உயர்வு : ஸ்மார்ட் போன் விலை உயர வாய்ப்பு

உதிரி பாகங்கள் இறக்குமதி வரி உயர்வால் சாம்ஸங், ஆப்பிள், ஷியோமி உள்ளிட்ட ஸ்மார்ட் போன் விலை 5 விழுக்காடு வரை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக ஸ்மார்ட்போன்களில் உபயோகப்படுத்தப்படும் டச் ஸ்கிரீனுக்கான இறக்குமதி வரியை 10% விழுக்காடாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இந்த வரி உயர்வு அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

சாம்ஸங், ஆப்பிள், ஷியோமி, ஓபோ, ரியல்மீ ஆகிய ஸ்மார்ட்போன்கள் விலை ஒன்றரை முதல் 5 விழுக்காடு வரை உயரும் என கூறப்படுகிறது.