கேபிஆர் கலை கல்லூரியில் நடைபெற்ற “சிகரம் தொடு”

கோவை கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக “சிகரம் தொடு” கபடி கபடி நிகழ்ச்சி இணைய வழியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், அர்ஜுனா விருது  பெற்றக் கபடி வீரர்  மனேத்தி கணேசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, கபடி விளையாட்டின் சிறப்புகள் குறித்தும் நுணுக்கங்கள் குறித்தும் மாணவர்களிடையே உரையாற்றினார். அவர் பேசுகையில், கபடி விளையாட்டை ஒலிம்பிக் போட்டிகளில் கொண்டுவருவதே தன்னுடையக் குறிக்கோளாக வைத்திருப்பதைக் குறிப்பிட்டார். கபடி வீரர்கள் நல்ல சத்தான உணவும் நல்ல உடல் ஆரோக்கியமும் சரியான உறக்கமும் கொண்டிருந்தால் பயிற்சியின் மூலமாகச் சிறந்த கபடி வீரராக வர முடியும் என்பதை தெரிவித்தார். மேலும், நமது பாரம்பரிய விளையாட்டானக் கபடி விளையாட்டை கே.பி.ஆர் கல்விக்  குழுமம் ஊக்குவிக்கும் விதமாக இந்நிகழ்வினை ஏற்பாடு செய்ததற்கு உறுதுணையாக இருந்த கே.பி.ஆர் கல்வி குழுமங்களின் தலைவர் கே.பி.ராமசாமி அவர்களுக்கும் கல்லூரியின் முதல்வர் பாலுசாமி அவர்களுக்கும் மனம் நிறைந்தப் பாராட்டுக்களைத் தெரிவித்து உரையை நிறைவு செய்தார்.

இந்நிகழ்வில் முதன்மையர்கள், பேராசிரியர்கள் , மாணவர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் என 150க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.