துருவ் விக்ரம் நடித்த ‘வர்மா’ :  தமிழ் ரசிகர்களை மகிழ்விக்க ஷெமரூமி பாக்ஸ் ஆபீசில் வெளியானது

தமிழ் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக ஆன்லைன் இணையதளமான ஷெமரூமி பாக்ஸ் ஆபீசில் துருவ் விக்ரம் நடித்த ‘வர்மா’ திரைப்படம் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டுள்ளது. ஓடிடி சேவையானது இப்போது தமிழ் படமான வர்மாவை உங்கள் வீட்டிற்கே கொண்டு வந்துள்ளது. மிகவும் பிரபலமான தெலுங்கு படமான ‘அர்ஜுன் ரெட்டி’யை ரீமேக் செய்து எடுக்கப்பட்ட இந்த படம் ஷெமரூமி பாக்ஸ் ஆபீசில் கடந்த 6ம் தேதி முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கி உள்ளார்.

இப்படத்தின் கதை சுருக்கமானது, மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவர் அங்கு படிக்கும் ஜுனியர் மாணவியை காதலிக்கிறார். அவர்களின் காதலை அந்த பெண்ணின் தந்தை ஏற்க மறுத்து வெறொருவருக்கு அந்த பெண்ணை திருமணம் செய்து வைக்கிறார். இதன் காரணமாக அந்த டாக்டர் மாணவர் பைத்தியம் பிடித்தது போல் அலைகிறார். வெறொருவரை திருமணம் செய்த அந்த பெண் அவருடன் வாழப் பிடிக்காமல் அங்கிருந்து வெளியேறி நிலையில் தனது காதலனை சந்திக்கிறார். அவர்களுக்கு இடையே என்ன நடக்கிறது என்பதே வர்மா திரைப்படத்தின் கதை.

ஷெமரூமி ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக பிராந்திய மொழி படங்களை இது ரிலீஸ் செய்து வருகிறது. தற்போது மிகச் சிறந்த தமிழ் படமான வர்மா இதில் வெளியிடப்பட்டுள்ளது.. ஷெமரூமி பாக்ஸ் ஆபிஸ், அதன் முதல் தமிழ் படமாக இதை வெளியிட்டு உள்ளது. ஏற்கனவே நெட்டிசன்கள் இந்த படத்தின் டிரெய்லரை பார்த்து மிகவும் ஆர்வத்துடன் உள்ளனர்.. பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம், மேகா சவுத்ரி மற்றும் ரைசா வில்சன் நடித்த வர்மா திரைப்படம், ஷெமரூமி பாக்ஸ் ஆபிசில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தை ரசிகர்கள் அனைத்து ஆண்ட்ராய்டு மொபைல் போன்களிலும் கூகிள் பிளே ஸ்டோரிலும் ஸ்ட்ரீமிங் செய்யலாம்.