வேலைவாய்ப்புகளை பெற்றுத்தரும் பிரத்யேக இணையதளம்

வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலம் தனியர்த்துறை வேலைவாய்ப்பு இணையதளம், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பணிவாய்ப்பு பெரும் நோக்கில் தமிழக முதல்வர் தமிழ்நாட்டில் வேலை நாடும் இளைஞர்களையும், வேலை அளிக்கும் தனியார் துறை நிறுவனங்களையும் இணையதளம் வழியாக இணைத்து வேலைவாய்ப்புகளை பெற்று தரும் நோக்கில், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட “தமிழ்நாடு தனியார்துறை வேலை இணையம்” (www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதளத்தை 16.6.2020 அன்று தொடங்கியது.

இந்த இணையதளத்தில் தற்போது வரை கோவை மாவட்டத்தை சார்ந்த வேலையளிப்போர் பதிவு செய்து 1800க்கும் பணிக்காலியிடங்களுக்கு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்து தங்களுக்கு தகுந்த தனியார் துறை வேலைவாய்ப்பினை பெறலாம். மேலும் தனியார் நிறுவனங்களும் இந்த இணையத்தளத்தில் தங்கள் நிறுவனத்திற்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய பணிகாலியிடங்களை அறிவிப்பு செய்து தகுதியான பணியாளர்களை நியமித்துக் கொள்ளலாம்.

இந்த இணையதள சேவையை வேலையளிப்போர் மற்றும் வேலைநாடுநர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.