எஸ்.பி.பிக்கு அஞ்சலி செலுத்தும் ராஜ் மெலோடிஸ் ஸ்டுடியோ

கோவை பால் கம்பெனி பகுதியில் உள்ள ராஜ் மெலோடிஸ் இசை குழுவினர் இறந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு இசையின் மூலம் அஞ்சலி செலுத்தினர்.

பிரபல பின்னணிப் பாடகரும் நடிகருமான எஸ்.பி.பி உயிரிழந்ததைத் தொடர்ந்து திரை உலகத்தினர் பொதுமக்கள் அரசியல் பிரமுகர்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அவருக்கு அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக கோவை பால் கம்பெனி பகுதியில் உள்ள ராஜ் மெலோடிஸ் ஸ்டுடியோ குழுவினர் அவருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி, அவரின் பாடல்களை சுமார் ஒரு மணி நேரம் பாடி அஞ்சலி செலுத்தினர். இதே போன்று கோவையில் பல்வேறு இடங்களில் பாடகர் எஸ்.பி.பி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.