ஜவுளி இயந்திரங்கள் மற்றும் உதிரிபாகங்களின் 11வது சர்வதேச கண்காட்சி

தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம்(சைமா) சார்பில் “டெக்ஸ்பேர்” என்ற பெயரில் ஜவுளி இயந்திரங்கள் மற்றும் உதிரிபாகங்களின் 11வது சர்வதேச கண்காட்சி வருகின்ற நவம்பர் 17ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை கோவை கொடிசியா கண்காட்சி வளாகத்தில் நடைபெற உள்ளது.

இது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் சைமாவின் தலைவர், பி.நடராஜ், துணைத்தலைவர்  கே.வினாயகம் மற்றும் சைமாவின் மற்றொரு துணைத்தலைவரான அஷ்வின் சந்திரன் கூறுகையில் ஜவுளி இயந்திரங்கள், உதிரிபாகங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகிப்பாளர்கள் 300 அரங்குகளில் தங்கள் பொருட்களை கண்காட்சியில் வைக்கப்பட உள்ளனர். மொத்தம் 250 நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்க உள்ளது. தமிழகத்தைத் தவிர, குஜராத், மராட்டியம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், அரியானா, பஞ்சாப், மேற்கு வங்கம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஜவுளி இயந்திர, உதிரிபாகங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகிப்பாளர்கள் இந்த கண்காட்சியில் தங்கள் பொருட்களை கண்காட்சிக்கு  வைப்பார்கள் இது தவிர சீனா, ஜப்பான், ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஜவுளி இயந்திர தயாரிப்பாளர்களும் இந்த கண்காட்சியில் பங்குபெற உள்ளனர்.

இந்த கண்காட்சியுடன் சைமா ஃபார்ம் டு ஃபினிஷ் கண்காட்சி 2017 எனப்படும் ஜவுளி பொருட்களின் கண்காட்சியும் நடைபெறும். இந்த கண்காட்சியில் சுமார் 50 ஜவுளி நிறுவனங்கள் தங்கள் பஞ்சு, பருத்தி விதை, நூல், துணி, ஆயத்த ஆடை, பின்னலாடை மற்றும் கைத்தறி ஆடைகளை இடம் பெற வைக்க உள்ளார்கள். கைத்தறி மற்றும் விசைத்தறி உரிமையாளர்கள் தங்கள் தேவையான நூலை தேர்வு செய்வதற்கு இந்த கண்காட்சி உதவும்.

ஜவுளித்தொழில் சம்பந்தப்பட்ட தொழில்முனைவோர்களுக்கு மட்டும் கண்காட்சியில் விஜயம் செய்ய அனுமதி சீட்டோ அல்லது பதிவு கட்டணமோ தேவையில்லை