கோவை அரிமா ப்ரெஸ்டீஜ் சங்கத்தின் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு விழா

கோவையில் பல்வேறு சமுதாய சேவைகளை திறம்பட செய்து வரும் கோவை அரிமா ப்ரெஸ்டீஜ் சங்கத்தின் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.

இதில் புதிய தலைவராக இளம் தொழில் முனைவோரான பங்கஜ் ஜெயின் பொறுப்பேற்று கொண்டார். இவரை தொடர்ந்து புதிய செயலாளராக அண்ணாதுரை, பொருளாளராக சம்பத்குமார் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்று கொண்டனர். புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் முன்னாள் கவர்னர் ரங்கநாதன் பதவியேற்பு செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களாக  முதல் நிலை ஆளுநர் குப்புசாமி, இரண்டாம் நிலை ஆளுநர் ஜான் பீட்டர் மற்றும் மாவட்ட கௌரவ ஆளுநர் மயில்சாமி, மற்றும் மோகன் குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பங்கஜ் ஜெயின், வரும் காலங்களில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு, சிறப்பு குழந்தைகள் மீது கவனம் செலுத்துவது மற்றும் கால வரையறை பார்க்காமல் பல்வேறு நெருக்கடி நேரங்களிலும் பணியாற்றும் காவலர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், குறிப்பாக சாலைகளில் பணியாற்றும்  போக்குவரத்து பெண் காவலர்களுக்கு பணி நேரத்தில் தேவையான வசதிகளை செய்ய உள்ளதாக அவர் தெரிவித்தார். முன்னதாக காது கேளாதோர் கருவியை இலவசமாக வெள்ளிங்கிரி என்ற முதியவருக்கு அவர் வழங்கினார். இவ்விழாவில் லயன்ஸ் கிளப் ஆப் ப்ரெஸ்டீஜ் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.