வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப்பணித் திட்ட தின கொண்டாட்டம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 52 வது நாட்டு நலப்பணித் திட்ட தினம் இணையவழியில் கொண்டாடப்பட்டது.

வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதன்மையர், கல்யாணசுந்தரம் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினரான அவினாசிலிங்கம் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜலட்சுமி தனது சிறப்புறையில், மாணவர்களின் ஆளுமை திறன், தலைமைத்துவப் பண்புகள், தன்னம்பிக்கை, மனவலிமை, கிராமப்புற பண்பாடு மற்றும் சமுதாய தொண்டு ஆகியவற்றை மேம்படுத்தலில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் தலைமையுரை வழங்கி, நாட்டு நலப்பணித் திட்ட நாளை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக செஞ்சுருள் சங்க அலுவலர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினர்.

முதன்மையர் (வேளாண் பொறியியல்), முதன்மையர் (தோட்டக்கலை), இயக்குநர் (இயற்கை வள மேலாண்மை), இயக்குநர் (தொலைதூரக்கல்வி), பல்கலைக்கழக அதிகாரிகள், துறைத்தலைவர் மற்றும் சுமார் 500 க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

முன்னதாக, மாணவர் நல மைய முதன்மையர், ரகுசந்தர் வரவேற்புரை வழங்கி விழாவினை துவக்கி வைத்தார். நிறைவாக, தமிழ்நாடு வேளான்மைப் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பாக்கியவதி நன்றியுரை வழங்கினார்.