வேலம்மாள் வித்யாலயா பள்ளி முதல்வருக்கு சிறந்த ஆசிரியருக்கான விருது

சென்னை ஷாகோதயா கிளஸ்டர் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் வேலம்மாள் வித்யாலயா பள்ளி முதல்வருக்கு சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கப்பட்டது.

சேட் பட்டு கிறிஸ்தவ யூனியன் பொதுப்பள்ளிகளின் சார்பில் செப்டம்பர் 22 அன்று மெய்நிகர் ஆசிரியர் தின சிறப்பு விழா பேராசிரியர் ஷாஜீவ் ஆபிரஹாம் ஜார்ஜின் தலைமையில் நடைபெற்றது.

விழாவில் மேற்கு சென்னை ஷாகோதயா கிளஸ்டர் பள்ளிகள் கூட்டமைப்பின் சார்பில் சிறந்த ஆசிரியருக்கான விருது வேலம்மாள் வித்யாலயா பள்ளி முதல்வர் ஷியாமளா அவர்களுக்கு வழங்கப்பட்டது.

ஆசிரியர் பணியின் மீதான அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாடு, இளம் தலைமுறையினரின் முன்னோடியாக செயலாற்றும் திறன் ஆகியவற்றின் காரணமாக இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. வேலம்மாள் பள்ளிக் குழுமம் இவருக்கு தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளது.