கோவையில் அம்மா நகரும் நியாயவிலைக் கடை வாகனம் துவங்கியது

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் “அம்மா நகரும் நியாய விலைக் கடை” வாகனத்தை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் (பொ) ரூபன்சங்கர்ராஜ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பழனிசாமி, வருவாய் கோட்டாட்சியர் தனலிங்கம், மாவட்ட வழங்கல் அலுவலர் குமரேசன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) துவராகநாத்சிங், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சீனிவாசன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இது குறித்து அமைச்சர் பேசுகையில், இந்த நடமாடும் நியாயவிலைக் கடைகள் மூலம், மாதம் ஒருமுறை குடும்ப அட்டைதாரர்களுக்கு வசதியான, அரசால் நிர்ணயிக்கப்பட்ட இடங்களில், தாய் கடையின் விற்பனையாளர் நேரில் சென்று அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்வார்கள். இதன் மூலம் மலைகிராமங்களில் வசித்து வரும் மக்களுக்கு மாதமாதம் கிடைக்கவேண்டிய அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி அவர்களின் இருப்பிடத்திலே கிடைக்கும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.