கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில், கசடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில், கசடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில்,  சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி அருண்குமார், வி.சி.ஆறுகுட்டி, ஓ.கே.சின்னராஜ்,  மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி, மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ்குமார், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) துவாரகநாத்சிங் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து, கூடலூர் பேரூராட்சியில் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்திலிருந்து 72.50 லட்சம் மதிப்பில் மேட்டுப்பாளையம் சாலையில் பேரூராட்சி எல்லை முதல் பெரிநாயக்கன்பாளையம் பேரூராட்சி எல்லை வரையிலும், வீரபாண்டி பேரூராட்சியில் ரூ.70.80 லட்சம் மதிப்பில் மேட்டுப்பாளையம் சாலை, வீரபாண்டி பிரிவு முதல் வீரபாண்டி பேரூராட்சி எல்லை வரையிலும், பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில், ரூ.44.80 லட்சம் மதிப்பில் மேட்டுப்பாளையம் சாலை, ஜோதிபுரம் முதல் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி எல்லை வரையிலும் பொருத்தப்பட்ட 120வாட்ஸ் சென்டர் மீடியான் எல்.இ.டி தெரு மின் விளக்குகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.