கோவையில் 600 ஐ கடந்த கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை

கோவை மாவட்டத்தில் இதுவரை 600க்கும் குறைவானவர்களுக்கே தினசரி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 648 ஆக பதிவாகியுள்ளது.

கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், கோவை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்படுவோர் மற்றும் உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கையின் படி 7 சதவீதம் கோவையில் பாதிப்பு குறைந்துள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

ஆனால், கோவையில் என்றும் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு இன்று புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அதன்படி, மாவட்டத்தில் இன்று 648 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், கோவையில் இதுவரை இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26 ஆயிரத்து 562ஆக அதிகரித்துள்ளது.