தமிழகத்தில் இடியுடன் கனமழை பெய்யக்கூடும் : வானிலை மையம்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிஷா கடலோர பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை கடந்த ஜூன் மாதம் முதல் விட்டுவிட்டு பெய்து வருகிறது. ஆகஸ்ட் மாதத்தில் பெய்த தீவிரமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலையால் கடந்த 24 மணிநேரத்தில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 18 செ.மீ மழை பெய்துள்ளது. நீலகிரியில் கடும் குளிருடன் மழை பெய்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பவானி, வால்பாறை, தேவாலா, சின்னக்கல்லார், சின்கோனா, சோலையார் பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

பிற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணிநேரத்தில் தமிழகம், புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

பிற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணிநேரத்தில் தமிழகம், புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் பிற பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. செப்டம்பர் 21, 22 ஆம் தேதிகளில் மன்னர் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திற்கு பலத்த காற்று வீசக்கூடும் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.