மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை: லோக்சபாவில் தகவல்

புதுடில்லி: நாடு முழுவதும், மத்திய அரசு, மாநில அரசுகள் ஏற்றுக் கொள்ளும் வகையில், மாற்றுத்திறனாளிகளுக்கு, தனிப்பட்ட அடையாள அட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக, மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட், லோக்சபாவில் கூறினார்.

இதுகுறித்து, கெலாட் கூறியதாவது:நாடு முழுவதும், 2.68 கோடி மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். அவர்களுக்கென தனிப்பட்ட அடையாள அட்டை, இதுவரை வழங்கப்படவில்லை. அதனால், அரசின் நலத்திட்ட உதவிகளையும், வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு பெறுவதிலும், அவர்கள் சிரமப்படுகின்றனர். இதை கருத்தில் வைத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு, தனிப்பட்ட அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. இதை பயன்படுத்தி, மத்திய, மாநில அரசுகளில், அவர்களுக்கான சலுகைகளை எளிதில் பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்