ஆசிரியர்களை கௌரவித்த ரத்தினம் கல்லூரி

தற்போதைய சூழலில் பல சவால்களை எதிர்கொண்டு ஆன்லைன் வழியாக கற்பித்தலில் ஈடுபட்டுள்ள பேராசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

கொரோனா கால ஊரடங்கால் பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்கள் ஆன்லைன் வழியாக வகுப்புகளை நடத்தி வருகின்றனர். அவர்களை ஊக்கு விக்கும் விதமாக கோவை ரத்தினம் கல்லூரியில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா கல்லூரித் தலைவர் மதன் ஆ செந்தில் தலைமையில் நடைபெற்றது.

இதில் அவர் பேசுகையில், தற்போதைய முறையில் ஆசிரியர்கள் மாணவர்களை ஆன்லைன் வழியாக கண்காணித்து, கல்வியில் அவர்களை எழுச்சியூட்டுவது மிகப்பெரும் சவால் என்றார். சிறப்பு விருந்தினர் ரெண்ட்லி சாப்ட்வேர் டெவலப்மெண்ட் நிறுவன இயக்குநர் பிஜோய்சிவன்,சிறந்த பேராசிரியர்களுக்கு விருதுகள் வழங்கினார்.

முதன்மை செயல் அதிகாரி மாணிக்கம், தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் நாகராஜ், கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முரளிதரன், தலைமைசெயல் அலுவலர் நித்தியானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கல்வியில் சிறந்து விளங்கிய மற்றும் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்த பேராசிரியர்களுக்கு ரத்தினம் கல்வி குழுமம் விருது வழங்கி சிறப்பித்தது.

ரத்தினம் தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவர்களுக்கான பல்வேறு சங்கங்களின் துவக்கவிழா மற்றும் சங்கங்களுக்கான லோகோ வெளியீடும் நடைபெற்றது.