டி.வி.எஸ் மோட்டார் நிறுவனத்திற்கு ஒரு லட்சம் முகக்கவசங்கள் நன்கொடை

தென் கொரியாவைச் சேர்ந்த பிரபலமான சமூக நல அமைப்பான அங்குக் ஜென் சென்டர், இந்தியா மற்றும் தென்கொரியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான மனிதாபிமான ஆதரவு முயற்சிகள் மற்றும் ஒற்றுமை நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் ஒரு லட்சம் சுகாதார முகக்கவசங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

இது டி.வி.எஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் மற்றும் சீனிவாசன் சர்வீசஸ் ட்ரஸ்டின் நிர்வாக அறங்காவலர், இன்கோ சென்டர் தலைவர் மற்றும் கொரிய குடியரசின் கலாச்சாரம் மற்றும் தூதரக நல்லெண்ண தூதுவர் வேணு சீனிவாசனிடம் ஒப்படைக்கப்பட்டது. டி.வி.எஸ் மோட்டார் நிறுவனத்தின் சமூக சேவை செயல்பாடுகள் பிரிவான சீனிவாசன் சர்வீசஸ் ட்ரஸ்ட் மூலம் இலவசமாக விநியோகம் செய்வதற்காக இந்த நன்கொடை வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து டி.வி.எஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் மற்றும் சீனிவாசன் சர்வீசஸ் ட்ரஸ்டின் நிர்வாக அறங்காவலர் திரு. வேணு சீனிவாசன் பேசுகையில், “இன்கோ மையத்திற்கு. 1 லட்சம் முகக்கவசங்களை நன்கொடையாக வழங்கும் இந்த கருணையுள்ளத்திற்காக எனது மதிப்பிற்குரிய ஆசான்சுபுல் சுனீமுக்கு எனது மனம் கனிந்த நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்களுக்கு உதவும் இந்த தனித்துவ மிக்க நல்லெண்ண வெளிப்பாடு, சென்னைக்கு பூசான் நகரம் அளித்திருக்கும் ஆதரவு, இந்தியா மற்றும் கொரிய குடியரசு இரு நாடுகளுக்கும் இடையிலான மதிப்புமிக்க உறவின் அரவணைப்பையும் ஆழத்தையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கிறது என்றார்.