மரத்தை திருமணம் செய்து ஓராண்டு திருமண விழாவை கொண்டாடிய இங்கிலாந்து பெண்

இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், மரம் ஒன்றை திருமணம் செய்துள்ளார்.

மிஸ். கேட் கன்னிங்ஹாம், கடந்த வாரம் தனது முதல் திருமண ஆண்டு விழாவை தனது கணவருடன் கொண்டாடினார். அவரது கணவராக ஒரு மரத்தை அவர் குறிப்பிடுகிறார். ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனால் உண்மை தான்!. முன்னர் செல்வி. கேட் கன்னிங்ஹாம்யாக இருந்தவர் தற்போது தன்னை திருமதி. கேட் கன்னிங்ஹாம் என்று தன்னை அறிமுகப்படுத்துகிறார்.

அவர் லிதர்லேண்டின் ரிம்ரோஸ் பள்ளத்தாக்கு பூங்காவில் உள்ள ஒரு மரத்துடன் தனது திருமண விழாவை நடத்தியுள்ளார். அங்கு புதிய பைபாஸ் அமைக்க மரங்களை வெட்ட உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து புதிய பைபாஸ் அமைப்பதை எதிர்க்கும் தனது பிரச்சாரம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையாக அவர் அங்குள்ள ஒரு மரத்தை திருமணம் செய்ய முடிவு செய்து, அதன்படியே திருமணத்தையும் நடத்தியுள்ளார்.

பூங்கா இருக்கும் பகுதியில் பல மேம்பாட்டுத் திட்டங்கள் இருப்பதால், அங்கிருக்கும் பல மரங்கள் வேருடன் அகற்றப்படுகிறது. ஒரு மரம் அதன் இடத்தில் இருந்து பிடுங்கப்படும் போதெல்லாம் அங்கிருக்கும் துணை உயிர்களும் பாதிக்கப்படுகின்றன. மண்ணின் மைக்ரோபயோட்டாவிலிருந்து அதை சார்ந்திருக்கும் விலங்குகள் மற்றும் பறவைகள் வரை அனைத்தும் பாதிக்கப்படுகிறது என அந்த பெண் கூறுகிறார்.

இதுகுறித்து டெய்லி மிரர் கட்டுரையில் வெளியான தகவலின் படி, அந்த பெண்ணுக்கு கிறிஸ்தவ முறைப்படி பூங்காவில் உள்ள மூத்த மரத்துடன் திருமண விழாவானது நடைபெற்றுள்ளது. மரத்துடனான திருமணம் குறித்து பேசிய திருமதி. கேட் கன்னிங்ஹாம், “இது தனது வாழ்க்கையின் மிகச் சிறந்த முடிவு என்றும், கணவனை விவாகரத்து செய்யும் திட்டங்கள் எதுவும் இல்லை” என்றும் வேடிக்கையாக கூறுகிறார். கேட் கன்னிங்ஹாமிற்கு ஒரு காதலர் மற்றும் இரண்டு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தனது முதல் திருமண ஆண்டு விழாவை திருமதி. கேட் கன்னிங்ஹாம் கொண்டாடியுள்ளார்.

இந்த விழாவில் அவருடன் இரண்டு நபர்கள் மட்டுமே கலந்து கொண்டார். அவரது காதலர் மற்றும் குழந்தைகள் வீட்டில் இருந்தனர். இந்த முழு சூழ்நிலையிலும் தனது 15 வயது மகன் எனது செயலால் கொஞ்சம் சங்கடப்படுகிறான் என்று கேட் கன்னிங்ஹாம் ஒப்புக்கொள்கிறாள். மேலும் சங்கடம் இருந்தபோதிலும் அவர் தனது தாயை ஆதரிப்பதற்காக கடந்த ஆண்டு திருமண விழாவில் கலந்து கொண்டார் என்றும் கூறினார்.

இருப்பினும் ஒரு மரத்தினை திருமணம் செய்து கொண்ட முதல் பெண் என கேட் கன்னிங்ஹாம்வை கூறிவிட முடியாது. ஏனெனில் 2018ம் ஆண்டில், 60 வயதான கரேன் கூப்பர் என்ற பெண் புளோரிடாவில் உள்ள ஒரு பூங்காவில் 100 வயதான ஃபிகஸ் மரத்தை மணந்தார். மரத்தை வெட்டாமல் காப்பாற்றுவதற்காகவே இந்த திருமணத்தை அவர் செய்து கொண்டார். நகரில் மரங்களை வெட்ட உள்ளதாக நான் கேள்விப்பட்டேன், அதை நான் விரும்பவில்லை என கூறினார். இவர் ஃபோர்ட் மியர்ஸில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக வசித்து வருபவர் என ஏபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கரேன் கூப்பர், சட்டவிரோத பதிவுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வகுப்புவாத விழாக்களை நடத்தும் மெக்சிகோவில் உள்ள ஒரு பெண்கள் குழுவிலிருந்து வந்தவராவார்.

ஒவ்வொரு பெண்ணும் ஒரு மரத்தை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கேட் கூறுகிறார். அப்போது தான் புதிய சாலைகளை உருவாக்க ஒருவரின் கணவரை வெட்ட முடியாது என்று கூறும் அவர், விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக “ஆண்டுதோறும் ஒரு மரத்தை திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்று அவர் முன்மொழிகிறார்.